அரசு முதல் முறையாக இந்தியாவில் சாகச சுற்றுலாப் பயணத்திற்கான ஒழுங்கு முறைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவின் சாகச சுற்றுலா இயக்குநர்கள் சங்கத்தோடு இணைந்து சாகச சுற்றுலாவிற்கான பாதுகாப்பான மற்றும் தரமான விதிமுறைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் தரை, ஆகாயம், மற்றும் நீர் சார்ந்த சாகச நடவடிக்கைகளான மலையேறுதல், பங்கி ஜம்ப்பிங் (Bungee Jumping), டிரெக்கிங் (Trekking), பாராகிளைடிங் (Paragliding), ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் (Snorkeling), ஆற்றுப் பயணம் மற்றும் இதர விளையாட்டுகளுக்குப் பொருந்தும்.