TNPSC Thervupettagam
March 23 , 2018 2309 days 768 0
  • தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வின் போது காவல் துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் தயார்நிலையை சோதிப்பதற்காக சாகர் கவாச் எனும் விரிவான கடலோரப் பாதுகாப்புப் பயிற்சி தொடங்கியது.
  • கடற்கரைப் பகுதிகள் முதல் 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை உள்ள பிராந்தியக் கடல்பகுதி வரை அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒன்றிணைந்த செயல்பாட்டோடுக் கூடிய தடையற்ற கடற்கரை & கடல் பாதுகாப்பை அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டது.
  • தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஒன்றியம் இணைந்து இந்தப் பயிற்சியை நடத்தின.
  • அரையாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் பயிற்சி கடலோரப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை சரிபார்ப்பதையும் தரமான இயக்க நடைமுறையை மதிப்பீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.
  • இந்த இரண்டு நாள் பயிற்சி தமிழ்நாடு மாநிலக் காவல்துறை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் இந்தியக் கடற்படையால் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்