இருநாள் கடலோர பாதுகாப்புப் பயிற்சியான சாகர் கவாச் (Sagar Kavach) பயிற்சியானது கேரளாவின் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தப்படுத்துவதற்காகவும், இந்திய கடலோரப் பாதுகாப்பு நடைமுறையை (coastal security mechanism) மதிப்பாய்வு செய்வதற்காகவும் இந்த பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல் படை (Indian Coast Guard -ICG), இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் அமைப்புகள், கடற் அமலாக்க பிரிவுகள் (Marine Enforcement wing) மற்றும் பிற பல்வேறு கடலோரப் பாதுகாப்பு பங்குதாரர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெற்றுள்ளன.
சாகர் கவாச் பாதுகாப்புப் பயிற்சியானது ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படுகின்றனது.