TNPSC Thervupettagam

“சாகர் கவாச்”

November 16 , 2017 2438 days 801 0
  • மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா மாநில அரசுகள் இணைந்து “சாகர் கவாச்” எனும் கூட்டுப் பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
  • இரு மாநிலங்களின் 630 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளில், நடப்பில் மேற்கொள்ளப்படும் கடலோரப் பாதுகாப்பு முறைமையை (Mechanism) மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தக் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • பல்வேறு பாதுகாப்புப் படைகளின் தயார்நிலை மற்றும் பாதுகாப்பு அளவுருக்களின் திறன் போன்றவற்றை சரிபார்க்க “சாகர் கவாச்” எனும் உண்மை நிலை ஒத்திகையாக  கூட்டுப் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பயிற்சியில், கடலோர காவற் படைகளின் கண்காணிப்பு, ரோந்துப்பணிகளின் செயல் திறனை சோதனை செய்ய ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் சமவாய்ப்பற்ற முறையில் (Random) தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் “Red Force” எனப் பெயரிடப்பட்ட உருவகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்