TNPSC Thervupettagam

சாகர் மைத்ரி

October 19 , 2023 276 days 297 0
  • இரண்டு மாத கால சாகர் மைத்ரி (SM)-4 திட்டத்தின் கீழ் INS சாகர்த்வானி கப்பலானது புறப்பட்டுள்ளது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்திற்கு (NPOL) சொந்தமான கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் ஆகும்.
  • இது சமூக-பொருளாதார அம்சங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதையும், இந்தியப் பெருங்கடலின் விளிம்பு பகுதியில் அமைந்த (IOR) நாடுகளில் அறிவியல் ஆய்வுகளை, குறிப்பாக கடல் ஆராய்ச்சித் துறையின் ஆய்வுகளை மேம்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது MAITRI எனப்படும் முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • MAITRI என்பது 'கடல் சார்ந்த மற்றும் அது தொடர்பான பல் துறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி முன்னெடுப்பு' என்பதன் பெயர் சுருக்கமாகும்.
  • 'கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு' என்ற களத்தில் இந்தியப் பெருங்கடலின் விளிம்பு பகுதியில் அமைந்த (IOR) நாடுகளுடன் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்