TNPSC Thervupettagam
December 22 , 2017 2404 days 983 0
  • இந்திய இலக்கிய படைப்புகளின் தேசிய அகாடமியான சாகித்திய அகாடமி அமைப்பு நடப்பாண்டின்,24 இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளின் ஆசிரியர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடாந்திர சாகித்திய அகாடமி விருதுகளை அறிவித்துள்ளது.
  • தமிழ் கவிஞரான மறைந்த திரு. இன்குலாப் அவர்களுக்கு தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கவிஞர் இன்குலாப் அவர்களின் ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
  • கீழக்கரையில் பிறந்த இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது.
  • வெள்ளை இருட்டு, சூரியனைச் சுமப்பவர்கள், ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் உட்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி
  • தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ என்ற மலையாள மொழி நாவலை, ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற பெயரில் யூமா வாசுகி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘காலச்சுவடு’ பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.
  • பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு, இரவுகளின் நிழற்படம் உள்ளிட்ட3 கவிதை நூல்கள், உயிர்த்திருத்தல் எனும் சிறுகதை நூல், ரத்த உறவு, மஞ்சள் வெயில் என 2 நாவல்களையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்