சாகித்ய அகாடமியின் புதிய தலைவர் - சந்திர சேகர கம்பர்
February 14 , 2018
2477 days
980
- கன்னட இலக்கியவாதியும் (litterateur) ஞான பீட விருது பெற்றவருமான சந்திர சேகர் கம்பர் சாகித்ய அகாடமியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் சாகித்ய அகாடமியின் தலைவராக பதவி வகிக்க உள்ளார்.
- ஹிந்தி கவிஞர் மாதவ் கௌசிக் சாகித்ய அகாடமியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இலக்கியத்திற்கான நாட்டின் உயரிய அமைப்பான சாகித்ய அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூன்றாவது கன்னட எழுத்தாளர் இவராவார்.
- மேலும் இவர் ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது, பத்ம ஸ்ரீ, காளிதாஸ் சம்மன் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது
- இலக்கியத்திற்கான இந்தியாவின் தேசிய அகாடமியான (National Academy of letters) சாகித்ய அகாடமி 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டது.
- இதன் தலைமையகம் டெல்லியின் இரபிந்திர பவனில் உள்ளது.
- இது இந்திய மொழிகளின் இலக்கியங்களை மேம்படுத்துவதற்கென அமைக்கப்பட்ட ஓர் நிறுவனமாகும்.
- ஆங்கிலம் உட்பட மொத்தம் 24 இந்திய மொழிகளில் இலக்கியப் பணிகளை மேற்கொள்ளும் ஒரே அமைப்பு சாகித்ய அகாடமியாகும்.
- மேலும் இது இந்திய மொழி இலக்கியங்களின் ஆய்வு, பிரசுரிப்பு மற்றும் மேம்பாடு போன்றவற்றை மேற்கொள்ளும் மத்திய இலக்கிய ஆராய்ச்சி நிறுவனமாகும்.
Post Views:
980