TNPSC Thervupettagam
December 20 , 2019 1683 days 751 0
  • சமீபத்தில், மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சாகித்ய நிறுவனமானது 2019 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர சாகித்ய அகாடமி விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதானது இந்த வருடம் 23 மொழிகளில் உள்ள படைப்புகளுக்கு வழங்கப் பட்டு இருக்கின்றது.
  • தமிழ் எழுத்தாளரான சோ. தர்மன் தனது சூல் என்ற புதினத்திற்காக 2019 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார்.
  • இந்த நாவலானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளைக்குடி என்ற  கிராமத்தில் வாழும் சமூகத்தின் கீழ்மட்ட மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது.

பற்றி

  • 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சாகித்ய அகாடமி விருதானது ஒரு இலக்கிய கௌரவ விருதாகும்.
  • 24 இந்தியப் பெரும் மொழிகளில் (அட்டவணையிடப்பட்ட 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம் & ராஜஸ்தானி) வெளியிடப்பட்டுள்ள மிகச் சிறந்த இலக்கியம் சார்ந்த புத்தகங்களுக்கு இந்த விருது வழங்கப் படுகின்றது.
  • சாகித்ய அகாடமி விருதானது ஞானபீட விருதுக்குப் பிறகு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த இலக்கிய கௌரவ விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்