TNPSC Thervupettagam
June 15 , 2019 1871 days 1085 0
  • சாகித்ய அகாதமி நிறுவனம் 2019 ஆம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதிற்காக 22 எழுத்தாளர்களையும் 2019 ஆம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருதிற்காக 23 எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது.
  • மைதிலி மொழிக்கான பால் சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் பின்னாளில் அறிவிக்கப்படவிருக்கின்றன.
  • பால் சாகித்ய புரஸ்காரானது விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுக் காலத்தில் (ஜனவரி, 01, 2003 – டிசம்பர் 31, 2017) முதன்முறையாக வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு வழங்கப் படுகின்றது.
  • இது எட்டாவதுப் பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆங்கில மொழிக்கும் வழங்கப்படுகின்றது.
  • யுவ புரஸ்கார் என்பது ஆங்கிலம் மற்றும் இராஜஸ்தானி ஆகிய மொழிகளுடன் சேர்த்துப் பட்டியலிடப்பட்ட 22 மொழிகள் என மொத்தம் 24 மொழிகளில் ஏதாவது ஒரு தலைசிறந்தப் பங்களிப்பை வழங்கிய இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு வருடாந்திர இலக்கிய விருதாகும்.
  • 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யுவ புரஸ்கார் விருது 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை அங்கீகரிக்கின்றது.
  • தமிழ்நாட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருதிற்கு எழுத்தாளர் சாமிநாதனும் பால சாகித்ய புரஸ்கார் விருதிற்குத் தேவி நாச்சியப்பனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “வால்” என்ற ஒரு கவிதைத் தொகுப்பிற்காக சபரிநாதனுக்கும் குழந்தை இலக்கியங்களில் நாச்சியப்பனின் பங்களிப்பிற்காக அவருக்கும் இவ்விருதுகள் வழங்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்