சாகி ஒரே சேவை மையத்தின் பங்கு பற்றிய தேசிய பயிற்சிப் பட்டறை
December 17 , 2017 2566 days 863 0
வன்முறைக்கான பலதரப்பட்ட தீர்வுகள் அளிப்பதை வலுப்படுத்துவதற்காக சாகி ஒரே சேவை மையத்தின் (One Stop Centres) பங்கு பற்றிய தேசிய பயிற்சிப் பட்டறை புது தில்லியில் நடத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக நடத்தப்படும் இது அத்துறையின் அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தியால் துவங்கப்பட்டது.
இந்த பயிற்சிப் பட்டறையில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தோராயமாக 400க்கும் மேற்பட்ட ஒரே சேவை மைய அலுவலர்களும் (One Stop Centres) மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையைச் சார்ந்த செயல்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சாகி திட்டம்
இத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மருத்துவ வசதி, காவல் உதவி, சட்ட உதவி, வழக்கு மேலாண்மை, உளவியல் ரீதியான கலந்தாய்வுகள் மற்றும் தற்காலிக உதவி போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றிட உதவி செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒரே சேவை மையங்களை படிப்படியாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.