TNPSC Thervupettagam

சாகோஸ் தீவுப் பிரச்சினை

May 26 , 2019 1916 days 587 0
  • சாகோஸ் தீவுக் கூட்டங்களிலிருந்து தனது “காலனியாதிக்க ஆட்சியை” ஆறு மாதத்திற்குள் திரும்பப் பெற வேண்டும் என்று ஐக்கிய இராஜ்ஜியத்தை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது.
  • சாகோஸ் என்பது ஆங்கில இந்தியப் பெருங்கடல் நிலப் பரப்பில் (British Indian Ocean Territory - BIOT) உள்ள ஒரு அதிகாரப்பூர்வப் பகுதியாகும்.
  • மொரீஷியஸ் நாடானது இத்தீவின் மீது தனது இறையாண்மையை மீண்டும் ஏற்படுத்த விரும்புகின்றது.
பிரச்சினை – வரலாறு
காலம்
சாகோஸ் தீவுக் கூட்டங்களை யார் நிர்வகிப்பது
18வது நூற்றாண்டு சாகோஸ் பிரான்சின் ஒரு பகுதியாகும். இது பிரான்சால் ஆட்சி செய்யப்பட்டது.
1810 ஐக்கிய இராஜ்ஜியம் மொரீஷியஷைக் கைப்பற்றியது.
1965 மொரீஷியசின் விடுதலை. ஆனால் ஆங்கில அரசு சட்ட விரோதமாக இதை (BIOT) உருவாக்கியது.
1966 டீ’கோ கார்சியாவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. (சாகோஸின் மிகப் பெரியத் தீவு)
2017 ஐக்கிய நாடுகள் தலையீடு. BIOT-ல் பிரிட்டீஷ் ஆதிக்கம் குறித்து சட்டப் பூர்வமாக முடிவு எடுக்குமாறு ICJவைக் கேட்டுக் கொண்டது.
2019 சாகோஸிலிருந்துப் பிரிட்டிஷ் விலக வேண்டும் என்ற “அறிவுரையை” சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்