TNPSC Thervupettagam

சாக்லேட் போர் - ஜார்க்கண்ட் காவல்துறை

February 5 , 2025 18 days 84 0
  • ஜார்க்கண்ட் மாநிலக் காவல்துறையானது, மாநிலத்தின் கிராமப்புற மக்களிடையே ஓபியம் சாகுபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை மிகவும் நன்கு சோதிப்பதற்காக வேண்டி ஒரு தனித்துவமான முன்னெடுப்பினை மேற்கொண்டு அதற்கு "சாக்லேட் போர்" என்று பெயரிட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், காவல்துறையினர் வாராந்திர கிராமச் சந்தைகளுக்குச் சென்று, ஓபியம் சாகுபடியின் சட்டரீதியான விளைவுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய உறைகளில் சுற்றப்பட்ட சாக்லேட்டுகளை விநியோகிக்கின்றனர்.
  • மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், அந்த மாநிலத்தின் குந்தி மாவட்டம் ஆனது இந்த நடவடிக்கைகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும் என்ற ஒரு நிலையில் அந்தப் பகுதியில் ஓபியம் 'முக்கியப் பயிராக' மாறியுள்ளது.
  • குந்தியின் அர்கி, சாய்கோ, முர்ஹு மற்றும் மரங்காடா அரஸ் ஆகிய சில இடங்களில் பெரிய அளவில் ஓபியம் சாகுபடி செய்யப்படுகிறது.
  • குந்தியைத் தவிர, ராஞ்சி, ஹசாரிபாக், லதேஹர், பலாமு மற்றும் சத்ரா ஆகிய சில மாவட்டங்களும் "ஓபியம் கடத்தலுக்கான" ஏற்ற இடங்களாக மாறியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்