TNPSC Thervupettagam
January 1 , 2019 2028 days 739 0
  • சாங்’இ-4 விண்கலமானது முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் மெதுவாகத் தரையிறங்க ஆயுத்தமாவதற்காக ஒரு திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் நுழைந்திருக்கின்றது.
  • இந்த விண்கலமானது முதன்முறையாக நிலவின் மறுபகுதியான இருண்ட பகுதியில் தரையிறங்குவதற்கான நிலைக்கு நகர்ந்துள்ளது.
  • சீன நாடானது டிசம்பர் மாதம் 08 ஆம் தேதியன்று லாங் மார்ச் - 3பி என்ற செலுத்து வாகனத்தின் மூலம் சாங்’இ-4 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
  • நிலவின் மறுபுறத்தில் இந்த விண்கலத்தின் மெதுவான தரையிறக்கமானது மிகவும் சவாலானது. ஏனெனில் விண்வெளி ஓடம் மற்றும் பூமி ஆகியவற்றிற்கு இடையேயான ஏதேனும் நேரடித் தொடர்பானது நிலவின் மற்ற அரைக் கோளத்தினால் தடுக்கப்பட்டு விடும்.
  • இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக சீன நாடானது, “கியூகியோ” அல்லது “மேக்பை பாலம்” என்ற ரிலே செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்