TNPSC Thervupettagam

சாங்காய் திருவிழா 2018- மணிப்பூர்

November 2 , 2018 2088 days 674 0
  • மணிப்பூர் அரசாங்கமானது 2018 சாங்காய் திருவிழாவை மணிப்பூரின் கெய்புல் லம்ஜாவோ, இம்பால் மற்றும் மாவோ ஆகிய 3 இடங்களில் நவம்பர் 21 முதல் 30 வரை கொண்டாடவிருக்கிறது.
  • இது மாநிலத்தை உலகளாவிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ஆண்டுதோறும் மணிப்பூர் சுற்றுலாத் துறையால் கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.
  • மணிப்பூரின் வரலாற்றில் முதல்முறையாக இவ்விழாவில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கலந்து கொள்கிறார்.
  • மணிப்பூரில் மட்டுமே காணப்படும் அம்மாநில விலங்கான சாங்காய் எனப்படும் முன்தலை கொம்பு மானின் பெயரால் இத்திருவிழா இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்