TNPSC Thervupettagam
December 22 , 2020 1439 days 569 0
  • சீனாவின் நிலவு விண்கலமான Chang’e 5 என்ற விண்கலமானது நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட பாறைகள் மற்றும் குப்பைகளின் 2 கிலோ கிராம் புதிய மாதிரிகளுடன் உள்புற மங்கோலியாவில் புவியில் தரையிறங்கியது.
  • Chang’e 5 ஆனது நவம்பர் 23  அன்று சீனாவில் உள்ள ஹய்னான் மாகாணத்திலிருந்து ஏவப் பட்டது.
  • இது சீனாவின் மூன்றாவது வெற்றிகரமான நிலவுத் தரையிறக்கத்தைக் குறிக்கின்றது. அதே சமயம் நிலவிலிருந்து திரும்பி வந்த ஒரே விண்கலம் இதுவாகும்.
  • 1976 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் லூனா 24 திட்டத்திற்குப் பிறகு எந்தவொரு நாட்டினாலும் மேற்கொள்ளப் படாத நிலவின் முதலாவது மாதிரிச் சேகரிப்பு இது ஆகும்.
  • 2003 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு தனது சொந்த விண்கலத்தின் மூலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்வெளி வீரர்களை அனுப்பிய மூன்றாவது நாடு சீனாவாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், Chang’e 4 ஆனது நிலவின் மறுபுறத்தில் உள்ள நிலத்தின் மீது  தரையிறக்கப்பட்ட வகையில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதலாவது நிலவுத் திட்டம் இது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்