நிலாவிற்கு சமீபத்தில் சீனாவின் சாங்‘ இ-4 ஆய்வு என்ற திட்டத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு பருத்தி விதை முளைவிடத் தொடங்கியிருக்கின்றது. இதுவே நிலவில் உயிரியல் தொடர்பாக வளரத் தொடங்கிய முதல் விவகாரம் ஆகும்.
ஜனவரி 3-ம் தேதியன்று, சீனாவின் தானியங்கி விண்வெளிக் கருவியான சாங்‘இ-4 ஆய்வுக் கருவி, விண்வெளி ஆய்வின் மனித வரலாற்றில் முதல் முறையாக நிலவின் மறுபக்கம் தரையிறங்கியது.
நிலவில் மெதுவாக தரையிறக்கம் மேற்கொண்ட 1.3 டன் எடையுடைய இந்த தரையிறக்கக் கருவி நிலவில் ஒரு சிறிய உயிர்க்கோளத்தை ஏற்படுத்துவதற்காக பருத்தி விதைகள், எண்ணெய் வித்துக்கள், கடுகு, உருளைக் கிழங்கு, அரபிடோப்ஸிஸ், பட்டாம் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் சிறிது ஈஸ்ட் ஆகியவற்றைக் கொண்டு சென்றது.
நிலவின் மீதான ஒரு சிறிய உயிர்க்கோள பரிசோதனைத் திட்டமென்பது ஒளிச் சேர்க்கை மற்றும் சுவாசத்தைச் சோதிக்கக் கூடிய ஒரு திட்டமாகும்.