TNPSC Thervupettagam

சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் - ஒடிசாவில் நிறைவேற்றம்

July 12 , 2019 1837 days 575 0
  • ஒடிசா மாநில அரசானது மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டின் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தினைச் செயல்படுத்தியுள்ளது.
  • இது குற்ற விசாரணை / நீதிமன்ற விசாரணை மற்றும் அதற்குப் பின்னருமான அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது.
  • இந்தத் திட்டமானது சாட்சிகளின் பாதுகாப்பு, அடையாள மாற்றம் & அவர்களின் இடமாற்றம், சாட்சிகளின் இல்லங்களில் பாதுகாப்புச் சாதனங்களை நிறுவுதல், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற அறைகளின் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது.
  • அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் A, B, C என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு சாட்சிகள் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
  • இத்திட்டத்தின் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒரு மாநில சாட்சிகள் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும்.
  • இந்த நிதியமானது மாநில அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்