சமீபத்தில், S.N. போஸ் தேசிய அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலக்ட்ரான் இணைகள் பிணைந்த நிலையில் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்காக ஒரு புதிய நெறிமுறையை உருவாக்கி உள்ளனர்.
எலக்ட்ரான் இணைகள் பிணைந்த நிலையில் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கான இந்த நெறிமுறையானது சாதனமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுயப் பரிசோதனை முறை என்றழைக்கப் படுகின்றது.
குவாண்டம் பிணைந்த நிலை என்பது ஒரு இணை அல்லது துகள் குழுக்கள் உருவாக்கப் படும் போது ஏற்படும் ஒரு இயற்பியல் சார்ந்த முறையாகும். மேலும் இவை ஒரு இணை அல்லது குழுவில் உள்ள ஒவ்வொரு துகளின் குவாண்டம் நிலையானது பிற துகள்களின் நிலையைச் சுதந்திரமாக விவரிக்க முடியாத முறையின் படி உள்ள வகையில் எதிர்வினையாற்றும்.