TNPSC Thervupettagam

சாதிவாரியான கணக்கெடுப்பு - குலசேகரன் ஆணையம்

January 27 , 2021 1306 days 5766 0
  • முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரனின் தலைமையில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஓர் ஆணையத்தை அமைத்துள்ளார்.
  • இது தமிழகத்தில் சாதிவாரியான தரவுகளைச் சேகரிப்பதைத் துவங்கும்.
  • சாதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தொகையை அறிய தமிழகம் முழுவதும் ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
  • அரசு வேலைவாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மீதான பிரதிநிதித்துவத்தின் போதாமையை எடுத்துக் காட்டி அளவிடக் கூடிய வகையிலான தரவுகளைச் சேகரிக்க வேண்டி அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுகளின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
  • சமீபத்தில் பட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் அரசாங்க வேலை மற்றும் அரசுக் கல்வியில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி சென்னை முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  • மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை நடத்துவதற்கு வேண்டி சாதி வாரியான தரவுகளும் இதற்கு தேவைப் படுகின்றன.
  • 1950களுக்குப் பிறகு தமிழகத்தில் இது சார்ந்து அமைக்கப் பட்டுள்ள முதல் குழு இதுவே ஆகும்.

தமிழ்நாட்டின் பின்னணி

  • 1969 ஆம் ஆண்டில் ஏ.என்.சட்டநாதன் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு சாதிகள் குறித்த  மக்கள் தொகையைத் தீர்மானிக்க வேண்டி சுதந்திரத்திற்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தியது.
  • 1983 ஆம் ஆண்டில், ஜே.ஏ.அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் வகுப்பு ஆணையமானது வீட்டுக்கு வீடு கணக்கீடு என்ற முறையின் மூலம் சாதி வாரியான சமூகப்-பொருளாதார மற்றும் கல்வி மீதான கணக்கெடுப்பை நடத்தியது.
  • இது 1985 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது.
  • தற்போதுள்ள 69% ஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசானது தமிழ்நாடு பிற்படுத்தப் பட்ட வகுப்புகள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
  • இது 1994 ஆம் ஆண்டில் 76வது திருத்த்தின் மூலம் அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு

  • 2021 ஆம் ஆண்டின் போதான மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய அரசானது முடிவு செய்து உள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் சமூகப்-பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், 1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது போன்ற தரவுகளைச் சேகரிக்கும் முதல் பொது மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும்.
  • இது 1931 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு முதல் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
  • 1992, 1997 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மக்கள் தொகை கணக்கெடுப்புகளுக்குப் பின்னர், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற பல்வேறு நலத் திட்டங்களைப் பெறும் குடும்பங்களை அடையாளம் காண வேண்டி இந்திய அரசு நடத்திய நான்காவது கணக்கெடுப்பாகும்.
  • சமூகப் பொருளாதார மற்றும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போன்று அல்லாமல் தனியாக நடத்தப்பட்டது.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையானது 1948 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இதை கிராமப்புறங்களில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும் நகர்ப்புறங்களில்  மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமும் மேற்கொண்டன.
  • 1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக, இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை பற்றிய தரவுகளும் 2011 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்டன.
  • முதல் சாதிவாரியான கணக்கெடுப்பானது இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • 1941 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு முயற்சியானது நிறுத்தப் பட்டது.
  • பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் நிரலானது 1961 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சீட்டுகளில் சேர்க்கப்பட்டது.
  • முதலாவது பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையம் 1953 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 340வது பிரிவின் கீழ் காக்கா காலேக்கர் என்பவரின் தலைமையில் அமைக்கப் பட்டது.
  • 1979 ஆம் ஆண்டில், இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையமானது மண்டல் அவர்களின் தலைமையில் கீழ் அமைக்கப்பட்டது.
  • மண்டல் ஆணையத்தின் அறிக்கையின்படி, பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 22.56 சதவீதம் ஆகும்.
  • மண்டல் ஆணையமானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை 52 சதவீதமாக கணக்கிட்டு இருந்தது.
  • இது 1931 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப் பட்டது.
  • இதனால் அரசு வேலைகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் 49.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நேர்ந்தது.
  • இது முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப் பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை உள்ளடக்கியது ஆகும்.
  • வி.பி.சிங் தலைமையிலான அரசாங்கத்தால் 1990 ஆம் ஆண்டில் இது செயல்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்