TNPSC Thervupettagam

சாத்தியமுள்ள மீன் பிடி மண்டலம்

March 21 , 2020 1713 days 560 0
  • சாத்தியமுள்ள மீன்பிடிப் பகுதிகள் குறித்த சாத்தியமுள்ள மீன்பிடி மண்டல ஆலோசனை அடங்கிய தொகுப்பை உருவாக்குவதற்காக Oceansat செயற்கைக்கோள் தரவு பயன்படுத்தப்படும் என்று கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் அறிவித்துள்ளது.  இந்த ஆலோசனையானது அனைத்து மாநிலங்களிலும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்த முறையானது இஸ்ரோவின் Oceansat-2 செயற்கைக்கோளிலிருந்து பெறப்படும் பச்சையத்தின் செறிவு குறித்த தரவையும் தேசியக் கடல் சார் வளிமண்டல நிர்வாகத்திடமிருந்து (NOAA/ அமெரிக்க செயற்கைக்கோள்) பெறப்படும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறித்த தரவையும் பயன்படுத்துகின்றது.
  • பேரிடர் முன்னெச்சரிக்கை குறித்த அவசரக் கால தகவல்களைத் தடையற்ற, திறனுள்ள முறையில் பரப்புதல், சாத்தியமுள்ள மீன்பிடி மண்டலங்கள் மற்றும் கடலின் நிலை குறித்து மீனவர்களுக்கு அறிவித்தல் ஆகியவற்றிற்காக மத்தியஅரசு, ககன் செயற்கைக்கோளால் செயல்படுத்தப்படும் மாலுமிகளின் கண்காணிப்பு மற்றும் தகவல் சாதனம் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்