TNPSC Thervupettagam

“சாத்தி” – புதிய முயற்சிக்காக மின்சக்தி மற்றும் ஜவுளித்துறை அமைச்சகங்கள் கைகோர்ப்பு

October 25 , 2017 2636 days 904 0
  • மின்சக்தி அமைச்சகமும் ஜவுளித்துறை அமைச்சகமும் சாத்தி என்ற புதிய முயற்சிக்காக கைகோர்த்துள்ளன.
  • சாத்தி/SAATHI என்பது Sustainable and Accelerated Adoption of Efficient Textile Technologies என்பதன் சுருக்கமாகும்.
  • இதன் அர்த்தம் சிறு தொழிற்சாலைகளுக்கு உதவிட நீடித்த மற்றும் மேம்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த ஜவுளித் தொழில் நுட்பங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பதாகும்.
  • இம்முயற்சியின் மூலம் மத்திய மின்சக்தி அமைச்சத்தைச் சேர்ந்த பொதுத்துறை அமைப்பான ஆற்றல் செயல்திறன் சேவைகள் நிறுவனம் (Energy Efficiency Services Ltd - EESL) அதிக அளவில் ஆற்றல் திறன்வாய்ந்த விசைத்தறிகள், இயந்திரங்கள் மற்றும் வாள் உபகரணங்களை கொள்முதல் செய்து அவற்றை சிறிய மற்றும் நடுத்தரமான விசைத்தறி கூடங்களுக்கு வெளிப்படையான நியாயமான விலையில் வழங்க உதவும்.
  • அரசின் இந்த முயற்சி, இந்தியா முழுவதும் ஜவுளி ஆணையகத்தாலும், ஆற்றல் செயல்திறன் சேவைகள் நிறுவனத்தாலும் இணைந்து செயல்படுத்தப்படும்.
  • இந்த சக்தி வாய்ந்த உபகரணம் மூலம் விசைத்தறி கூடங்களுக்கு ஆற்றல் சேமிப்பும் செலவு கட்டுப்பாடும் ஏற்படும்.
  • மொத்த கொள்முதலும் மொத்த திரண்ட தேவைகளும் மூலதன செலவுகளை குறைப்பதற்கு உதவி, அதன் பயன்கள் விசைத்தறிக் கூடங்களுக்கு சென்றடைந்து அதன் மூலம் அக்கூடங்கள் தங்கள் கடன் தொகையையும் அதன் கால அளவையும் குறைக்க முடியும்.
  • இந்தியாவில் விசைத்தறிக் கூடம் பெரும்பான்மையாக அமைப்புசாரா தொழிலாகவும் நாட்டின் துணி உற்பத்தி துறையில் 57 சதவிகித உற்பத்தி அளவிற்கு பங்களிக்கும் அதிக அளவிலான குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளை கொண்டதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்