இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, 565 மணிக்கு கிலோமீட்டர் என்ற வேகத்திலான பேட்மிண்டனில் ஷாட் அடித்து ஒரு தசாப்தமாக நடப்பில் இருந்த உலக கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
மலேசியப் பேட்மிண்டன் வீரரான டான் பூன் ஹியோங், அவர்களால் மேற் கொள்ளப் பட்ட முந்தைய உலகச் சாதனையான மணிக்கு 493 கி.மீ. வேகத்தில் அடித்த சாட் என்ற சாதனையினை இவர் முறியடித்தார்.
மகளிர் பிரிவில் மணிக்கு 438 கி.மீ. வேகத்தில் சாட் அடித்து மலேசியாவின் பேர்லி டான் சாதனை படைத்துள்ளார்.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பதிவான ஒரு அதிவிரைவான வேகச் சாதனையானது மணிக்கு 397.48 கி.மீ. என்ற வேகம் ஆகும்.
அதே நேரத்தில் அதிவேகமாக டென்னிஸ் பந்து அடிக்கப்பட்ட ஒரு சாதனையானது ஒரு மணிக்கு 263 கி.மீ. என்ற வேகம் ஆகும்.