TNPSC Thervupettagam

சாபஹர் தினம்

March 7 , 2021 1272 days 520 0
  • இந்தியாவானது கடல்சார் இந்தியா மாநாடு 2021 என்ற மாநாட்டின் ஒரு பகுதியாக மார்ச் 04 அன்றுசாபஹர் தினத்தைஅனுசரிக்க உள்ளது.
  • இது மார்ச் 02 ஆம் தேதி முதல் மார்ச் 04 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றது.
  • இந்த நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தான், அர்மெனியா, ஈரான், கஜகஸ்தான், ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • சபாஹர் துறைமுகம்
  • இந்தியா மற்றும் ஈரான் ஆகியவை தென்கிழக்கு ஈரானில் உள்ள ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ள சாபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
  • இந்தியப் பெருங்கடலிற்கு நேரடி அணுகலை வழங்கும் ஒரே துறைமுகம் சாபஹர் துறைமுகம் ஆகும்.
  • இந்தத் துறைமுகமானது இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிற்கிடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கம் கொண்ட ஒரு முக்கியமான இணைப்புத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்