ஈரானின் தென்கிழக்குத் துறைமுகமான சாபஹரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஈரானுடன் கையெழுத்திட்டது.
ஈரானின் தென்கிழக்குக் கடற்கரையில் ஓமன் வளைகுடாவைச் சேர்ந்தப் பகுதியில் அமைந்துள்ள சாபஹர் துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா உருவாக்கி வருகிறது.
பரபரப்பான தேர்தல் காலத்தின் மத்தியில் நடைபெறும் இந்த நடவடிக்கை, முக்கியப் பிராந்தியத் தாக்கங்களுடன் ஈரானுக்கான குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
இது வெளிநாட்டுத் துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியாவானது கைப்பற்றிய முதல் நிகழ்வாக அமைகிறது.