TNPSC Thervupettagam

சாபஹார் இரயில் திட்டம்

July 16 , 2020 1502 days 549 0
  • ஈரான் ஆனது இந்தியாவின் உதவி ஏதுமின்றி சாபஹார் துறைமுகத்திலிருந்து சஹிதான் வரையிலான இரயில் பாதை கட்டமைப்புப் பணியைத் தொடர முடிவு செய்து உள்ளது.
  • இந்த இரயில் திட்டமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். இது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு ஒரு மாற்று வர்த்தக வழித்தடத்தைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சாபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி, இந்தியாவானது பாகிஸ்தானின் உதவி ஏதும் இல்லாமல் ஆப்கானிஸ்தானிற்கு சரக்குப் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும்.
  • இது ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இது ஈரானின் ஒரே கடல்சார் துறைமுகம் இதுவாகும்.
  • சீனாவானது குவாதர் துறைமுகத்தை மேம்படுத்த பாகிஸ்தானிற்கு உதவி செய்ய உறுதி அளித்துள்ளது.
  • குவாதர் துறைமுகமானது சாபஹார் துறைமுகத்திலிருந்து சாலை வழியாக 400 கிலோ மீட்டர் தொலைவிற்கும் குறைவாகவும், கடல் வழியாக 100 கிலோ மீட்டர் தொலைவிற்கும் குறைவாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்