TNPSC Thervupettagam

சாபஹார் தின மாநாடு

August 3 , 2022 720 days 384 0
  • சாபஹார் தின மாநாடானது மும்பையில் தொடங்கப்பட்டது.
  • இதன் தொடக்க விழா நிகழ்வில் கஜகஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்தியாவும் ஈரானும் 2016 ஆம் ஆண்டு மே மாதத்தின் போது இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • ஷாஹித் பெஹெஷ்தி என்ற துறைமுகத்தில் உள்ள கப்பல் நிறுத்தங்களுள் ஒன்றைப் புதுப்பிப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது.
  • இந்தத் துறைமுகத்தில் உள்ள 600 மீட்டர் நீளமுள்ள ஒரு கொள்கலன் கையாளும் மையத்தினைப் புனரமைப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது.
  • 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியா ஆப்கானிஸ்தானுக்குச் சாபஹார் துறைமுகம் வழியாக கோதுமையை முதல்முறையாக ஏற்றுமதி செய்தது.
  • இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 2016 ஆம் ஆண்டில் சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • முத்தரப்பு போக்குவரத்து மற்றும் இடம் பெயர்வு வழித்தடத்தை அமைப்பதற்கும் இந்த நாடுகள் ஒப்புக் கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்