TNPSC Thervupettagam

சாம்பார் ஏரியில் ஒரு புதிய ஆர்க்கியா (தொன்மை பாக்டீரியாக்கள்)

January 28 , 2020 1636 days 675 0
  • தேசிய நுண்ணுயிர் வள மையம் - தேசிய செல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் (National Centre for Microbial Resource — National Centre for Cell Science / NCMR - NCCS) ராஜஸ்தானில் உள்ள சாம்பார் உப்பு ஏரியில் ஒரு புதிய ஆர்க்கியாக்களை (தொன்மை பாக்டீரியாக்கள் - ஒரு வகையான நுண்ணுயிரிகளை) கண்டுபிடித்து உள்ளனர்.
  • ஆர்க்கியா (ஒற்றை ஆர்க்கியோன்) என்பது வெப்பமான நீரூற்றுகள், குளிர்ந்த பாலைவனங்கள் மற்றும் உயர் உப்புத் தன்மை கொண்ட ஏரிகள் போன்ற மிகக் கடுமையான வாழ்விடங்களில் செழித்து வளரும் நுண்ணுயிரிகளின் ஒரு பழமையான குழு ஆகும்.
  • இவை   நுண்ணுயிர் எதிரி மூலக்கூறுகளை உருவாக்குவதற்காகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவு நீர் சுத்திகரிப்புப் பயன்பாடுகளுடன் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்காகவும் அறியப் படுகின்றன.
  • சாம்பார் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய ஆர்க்கியாவிற்கு நாட்டில் நுண்ணுயிர்ப் பன்முகத்தன்மை ஆய்வுகளுக்கு மிகுந்த பங்களிப்பு அளித்ததற்காக உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளரான டாக்டர் ரேணு ஸ்வரூப்பின் பெயரால் “நட்ரியால்பா ஸ்வரூபியா” என்று பெயரிடப் பட்டுள்ளது.

NCMR – NCCS பற்றி

  • தேசிய நுண்ணுயிர் வள மையமானது நுண்ணுயிர் கலாச்சாரச் சேகரிப்பு மையமாக (Microbial Culture Collection - MCC) 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் வருகின்றது.
  • பாக்டீரியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்து, அதனைப் பட்டியலிடுவதே இதன் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்