TNPSC Thervupettagam

சாம்பியன்ஸ் படகுப் போட்டி: பாம்புப் படகுப் பந்தயம் - கேரளா

September 1 , 2019 1915 days 677 0
  • ஆலப்புழாவில் புன்னமடா ஏரியில் நடைபெற்ற பெருமைமிகு நேரு டிராபியின் 67வது பதிப்பை பல்லதுருத்தி படகு மன்றத்தின் பாம்புப் படகான நடுபாகம் சுந்தன் வென்றது.
  • சம்பக்குளம் சுந்தன் மற்றும் கரிச்சல் சுந்தன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • 1952ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரதமர் ஆலப்புழைக்கு வருகை தந்து நடுபாகம் சுந்தன் (பாம்புப் படகு) படகில் பயணித்தார்.

இதுபற்றி

  • இந்தப் பந்தயம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பரவி இருக்கும் பாம்புப் படகுப் பந்தயங்களை தொழில்நுட்பப் படுத்துவதிலும், அவர்களின் பாரம்பரிய தன்மையை அழிக்காமல் அவற்றை வர்த்தகப் படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்துகின்றது.
  • கேரளாவின் சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் இப்பந்தயம் ஐபிஎல் பந்தயத்தின் மாதிரியில் நாட்டில் நடத்தப்படும் முதலாவது படகுப் பந்தயமாகும்.
  • இப்போட்டியில் மொத்தம் 12 பந்தயங்கள் இருக்கும்.
  • இது நேரு டிராபியுடன் துவங்கி நவம்பர் 23 தேதியன்று கொல்லத்தில் குடியரசுத் தலைவர் படகுப் பந்தயக் கோப்பையுடன் முடிவடைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்