TNPSC Thervupettagam

சாம்பியன் சேவைத்துறை

April 9 , 2018 2423 days 954 0
  • அடையாளம் காணப்பட்டுள்ள 12 சாம்பியன் சேவைத் துறைகளுக்கு (Champion Services Sectors-CSS) அவற்றினுடைய வளர்ச்சியை மேம்படுத்தவும் அவற்றினுடைய செயல்பாட்டு ஆற்றலை முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் அவற்றின் மீது மைய கவனத்தை (focused attention) வழங்க வேண்டுமென்ற மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் (Ministry of Commerce and Industry) முன்மொழிவிற்கு மத்திய கேபினெட் அனுமதி வழங்கியுள்ளது.
  • அடையாளம் காணப்பட்டுள்ள 12 சாம்பியன் சேவைத் துறைகள்
    • தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தகவல் தொழிற்நுட்ப வசதி உடைய சேவைகள் (Information Technology enabled Services- ITeS) .
    • மருத்துவ மதிப்பு பயணம், போக்குவரத்து மற்றும் பண்டகச் சேவைகள், சுற்றுலா துறை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள்.
    • கணக்குத் தணிக்கை மற்றும் நிதிச் சேவை, காணொளி – கேட்பொலி சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகள், சட்ட சேவைகள்.
    • கட்டுமானம் மற்றும் அதுசார் பொறியியல் சேவைகள், சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் கல்வியல் சேவைகள், நிதியியல் சேவைகள்.
  • இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற திட்டத்திற்கு முதன்மை வழிநடத்துத் துறையான தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது  (Department of Industrial Policy and Promotion -DIPP) தொழில் உற்பத்தித் துறையில் சாம்பியன் துறைகளுக்கான தொடக்கங்களினை வழி நடத்தும்..
  • உலக சேவைத் துறை ஏற்றுமதியில் (global services exports) 2015 ஆம் ஆண்டில் இந்திய சேவைத் துறையின்  பங்கு3 சதவீதமாகும். இது, 2014 ஆம் ஆண்டு  3.1% ஆக இருந்தது. முன்மொழியப்பட்டுள்ள சாம்பியன் துறை  தொடக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு உலக சேவைத் துறை  ஏற்றுமதியில் இந்தியாவின் சேவைத் துறையினுடைய பங்கை 4.2% ஆக அதிகரிக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அடையாளம் காணப்பட்டுள்ள சாம்பியன் துறைகள் ஒவ்வொன்றுக்கும் 2022 ஆம் ஆண்டில்  திட்ட நோக்கத்தை  (vision) ஏற்படுத்த  செயல்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இச்செயல்திட்டம் திட்டநோக்கத்தை அடைவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விளக்குகிறது.
  • மத்திய வர்த்தகத் துறையானது சாம்பியன் சேவைத் துறைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள தொடக்கங்களை ஒருங்கிணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்