TNPSC Thervupettagam
December 18 , 2023 343 days 255 0
  • சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் ஆனது (IUCN) இந்த இனங்களை (சாய்கா டாடாரிகா) மிகவும் அருகிய நிலையில் உள்ள இனம் என்ற வகையிலிருந்து அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் ஆக மாற்றப்பட்டது.
  • சாய்கா என்ற இனத்தில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் சைகா டாடாரிகா டாடாரிகா மற்றும் மங்கோலியாவில் மட்டுமே காணப்படும் சைகா டாடாரிகா மங்கோலிகா என இரண்டு துணை இனங்கள் உள்ளன.
  • ஐரோப்பாவில் ஹங்கேரி முதல் ஆசியாவின் மஞ்சூரியா வரை பரந்து விரிந்து கிடக்கும் பெரியப் புல்வெளிப் பகுதியான ஐரோப்பிய ஆசிய ஸ்டெப்பி புல்வெளி முழுவதும் ஒரு காலத்தில் இந்த இனம் காணப்பட்டது.
  • கஜகஸ்தானில் 2005 ஆம் ஆண்டில் வெறும் 48,000 ஆக இருந்த சாய்கா இனங்களின் எண்ணிக்கையானது தற்போது 1.9 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கணக்கெடுப்பின்படி, மங்கோலியன் கிளை இனங்களில் 15,540 உயிரிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்