TNPSC Thervupettagam

சார்க் நாடுகளுக்குப் பயிற்சி

April 17 , 2020 1591 days 625 0
  • இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது (ITEC - Indian Technical and Economic Cooperation Programme) சார்க் நாடுகளைச் சார்ந்த சுகாதார நல வல்லுனர்களுக்காக ஒரு பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது. 
  • இந்த திட்டமானது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட இருக்கின்றது.
  • முன்னதாக இந்தியா சார்க் கோவிட் – 19 அவசரகால நிதி என்ற ஒரு நிதியினை ஏற்படுத்தப் பரிந்துரைத்திருந்தது. 
  • இந்தியா இந்த நிதிக்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. 
  • ITEC திட்டமானது 1964 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • ITEC ஆனது இருதரப்பு மற்றும் பலதரப்புத் தன்மை ஆகிய இரண்டு  நிலையையும் கொண்டதாகும்.
  • இந்தத் திட்டமானது முழுவதும் இந்திய அரசினால் நிதியளிக்கப்படுகின்றது.
  • இது வெளிநாட்டு மாணவர்களுக்கு தனது  பயிற்சியை வழங்குவதுடன், அவர்களது உயர்கல்வியைத் தொடரவும் அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்