நடப்பு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு (State of Art) புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கடல் ரோந்துக் கப்பலான சார்லி – 435 ரோந்துக் கப்பல், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஓர் பகுதியான காரைக்காலில் அமைந்துள்ள இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
சார்லி - 435
நவீன வழிகாட்டு அமைப்பும் (modern navigation) தகவல் தொடர்பு அமைப்பும் (communication system) சார்லி 435 கடலோரக் காவல் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
கிழக்குக் கடலோர மண்டலத்தில், சென்னை மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த இக்கப்பல் உதவும்.
மோசமான வானிலைகளால் கடலில் பாதிப்பிற்குள்ளாகும் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இக்கப்பல் பெரும் துணை புரியும்.