தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal – NGT) சார் தம் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான முன்மொழிவுக்கு இசைவு தெரிவித்து உள்ளது.
கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் எனும் புனித யாத்திரை நகரங்களுக்கு இடையேயான சாலைவழித் தொடர்பை மேம்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டமே சார் தாம்.
யாத்ரிகர்கள் மற்றும் இராணுவ பாதுகாப்பு படைகளுக்கு அனைத்து காலநிலைகளுக்கு ஏற்ற சாலைத் தொடர்பு வசதிகளை தரக்கூடிய நிலச்சரிவு தணிப்பு வசதிகள் மற்றும் பிற சாலை பாதுகாப்பு வசதிகள் தரும் கூறுகளோடு, நடைபாதைகளோடு கூடிய சாலைகள் அமைத்தலே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.
குறிப்பு
பொதுவாக உத்ரகாண்டிலுள்ள இந்த நான்கு பண்டைய யாத்திரை மையங்களும் சோட்டா சார் தாம் (Chota Char Dham) என அழைக்கப்படும்.
புரி, இராமேஸ்வரம், துவார்கா, பத்ரிநாத் ஆகிய நவீனகால யாத்திரை மையங்களின் சாலை சுற்றமைப்பே சார் தாம் என்றழைக்கபடும்.