திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப் பட்டதிலிருந்து நாட்டில் விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 10% குறைந்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 24% என்ற அளவில் குறைப்பதில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இறப்பைக் குறைத்தது தமிழ்நாடு ஆகும்.
புதிய மோட்டார் வாகனச் சட்டமானது ஓட்டுநர் செய்யும் தவறுகளுக்கான அபராதங்களை அதிகரித்துள்ளது.
மேலும் மோட்டார் வாகனச் சட்டமானது பொதுப் பட்டியலில் இருப்பதாகவும் இச்சட்டத்தில் குற்றங்களைக் கூட்டவும் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சட்டத்தின் விதிகளை அமல்படுத்தவும் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.