உலக வங்கியானது சமீபத்தில் தனது ஒரு அறிக்கையை “போக்குவரத்து விபத்து காயங்கள் மற்றும் குறைபாடுகள்: இந்தியச் சமூகத்தின் மீது சுமை” என்ற தலைப்பில் வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, உலகின் வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது.
ஆனால் சாலை விபத்துகளால் உலகளாவிய இறப்பில் இந்தியா 11 சதவீதத்தை கொண்டுள்ளது.
சாலை விபத்து காரணமாக இது உலகிலேயே அதிக இறப்பு எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளது.
கிராமப்புற ஏழை மக்களின் சாலை விபத்து இறப்புகள் 44 சதவீதமாகும்.
நகர்ப்புற ஏழை மக்களின் சாலை விபத்து இறப்புகள் 11.6 சதவீதமாகும்.