நாட்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சாலை விபத்துகள் குறித்து தரமான மற்றும் துல்லியமான தகவல்களுக்காக மென்பொருளை பயன்படுத்தும் மூன்றாவது மாநிலமாகும்.
சாலை விபத்து தகவல் மேலாண்மை அமைப்பு (RADMS - The Road Accident Data Management System) என்பது சாலை விபத்து தகவல்களின் தானியங்கு மென்பொருள் அடிப்படையிலான தீர்வாகும்.
RADMS என்பது சாலைகளில் உள்ள குழிகள், தவறான ஓட்டுநர் முறைகள், சாலை கட்டமைப்பு, வாகன குறைபாடுகள், சாலை வகைகள், பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு, பணிமிகுப்பு பிரச்சனைகள், ஓட்டுநர் பிரச்சனைகள் மற்றும் சாலை விபத்தை ஏற்படுத்தும் இதர பிரச்சனைகள் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் புவியியல் தகவல் முறைமை ஆகும்.
இதற்குமுன் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் RADMS -ஐ அறிமுகப்படுத்தியது.