TNPSC Thervupettagam

சால்வினியா மொலஸ்டா

July 15 , 2024 3 days 66 0
  • சைர்டோபாகஷ் சால்வினியா என்ற அயல்நாட்டு வண்டு இனங்களானது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாத்புரா அணைப் பகுதியிலிருந்து ‘சீன லார் வகை பாசிகளை’ 18 மாதங்களில் முற்றிலுமாக அகற்ற உதவியுள்ளது.
  • சால்வினியா மொலஸ்டா என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் நீர்வாழ் சிற்றிலைப் படர்ச் செடியினம் (ஃபெர்ன்) ஆகும்.
  • பிரேசிலிய உயிரித் தடுப்புக் காரணியாக விளங்கும் சைர்டோபாகஷ் சால்வினியா எனப்படுகின்ற இந்த வண்டு இனமானது குறிப்பாக சால்வினியா மொலஸ்டாவை குறி வைத்து அழிப்பதற்காக வேண்டி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
  • சால்வினியா மொலஸ்டாவை மட்டுமே உண்ணும் இந்தப் பூச்சியானது, உணவு மூலம் தீர்ந்தவுடன் இயற்கையாக இறந்து விடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு இது எந்த வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்