TNPSC Thervupettagam

சாளக் கிராமம் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

August 20 , 2023 335 days 245 0
  • 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்து மதம், பௌத்தம் மற்றும் ஷாமானிய இமாலய மதமான பான் பௌத்தம் ஆகியவை சாளக் கிராமம் என்ற கல்லினை வணங்குகின்றன.
  • இது நவீன கால கணவாய் மீன்களுடன் தொடர்புடைய அழிந்து போன சில கடல் வாழ் உயிரினங்களின் வகுப்பான அம்மோனைட்டுகளின் பழங்காலப் புதைபடிவமாகும்.
  • சாளக்கிராம கற்கள் என்பவை முதன்மையாக ஒரு இந்துக் கடவுளான விஷ்ணுவின் வெளிப் பாடுகளாகக் கருதப்படுகின்றன.
  • இது வடக்கு நேபாளத்தில் உள்ள ஒரு தொலைதூரப் பகுதியில் - முஸ்டாங்க் பகுதியின் காளி கண்டகி நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் தோன்றியது.
  • பருவநிலை மாற்றம், பனிக்கட்டி விரைவாக உருகுதல் மற்றும் காளி கண்டகி பகுதியில் மேற்கொள்ளப்படும் சரளைக்கல் சுரங்கப் பணி ஆகியவை இந்த ஆற்றின் போக்கை மாற்றுகின்றன.
  • இந்தத் தாக்கங்கள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் குறைவான அளவிலான சாளக் கிராமக் கற்கள் மட்டுமே வெளித் தோன்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்