புதிய தொல்பொருள் பதிவுகள், 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பகால மனிதர்கள் பயணித்த அட்லாண்டிஸ் போன்ற நிலப்பரப்பு குறித்த ஆதாரங்களை வழங்குகின்றன.
ஒரு காலத்தில் சாஹுல் என்று அழைக்கப்பட்ட இந்த மாபெரும் கண்டம் ஆனது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது வெளிப் பட்ட ஒரு நிலப்பரப்பாகும்.
இந்தக் காலகட்டத்தில் பூமி பிற்காலப் பனி யுகத்தின் மையக் கட்டத்தில் இருந்தது.
பனிப்பாறையாக்க நிகழ்வானது, கடல் மட்டம் குறைவதற்கு வழிவகுத்ததால், முன்பு நீரில் மூழ்கியிருந்த கண்ட அடுக்குகளின் பகுதிகளை வெளிப்பட்டன.
இது தற்போது ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி எனப்படும் வடக்கில் பப்புவா நியூ கினியா மற்றும் தெற்கில் டாஸ்மேனியாவுடன் இணைக்கும் நிலத்தை வெளிப்படுத்தியது.