TNPSC Thervupettagam

சாஹ்யோக் இயோபிளையியோக் 2018

April 9 , 2018 2425 days 731 0
  • சாஹ்யோக் இயோபிளையியோக்   (Sahyog-Hyeoblyeog 2018’) எனும் 2018  ஆண்டிற்கான இந்தியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையேயான கடற்கொள்ளை எதிர்ப்பு (Anti-piracy), மீட்பு மற்றும் தேடல் கூட்டுப் போர்ப்பயிற்சி வங்காள  விரிகுடாக் கடலில் தமிழ்நாட்டின் சென்னை கடற்கரையில் நடத்தப்பட்டுள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் (Indian Ocean Region-IOR) கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க (Maritime Security) இந்தியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (memorandum of understanding -MoU) ஒரு பகுதியாக இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு படைக்கும் (Indian Coast Guard-ICG) கொரியக் கடலோரப் பாதுகாப்பு படைக்கும் (Korean Coast Guard-KCG) இடையே இந்த  கூட்டுப் போர்ப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

  • இந்த கடற்கூட்டுப் போர்ப்பயிற்சியில், இந்தியக் கடற்படையின் டார்னியர் விமானமும் (Dornier aircraft), ICG சவுரியா (ICG Shaurya), ராணி அப்பக்கா (Rani Abbakka), C-423, C-431 ஆகிய கப்பல்களும் பங்கு பெற்றன.
  • கொரியாவின் சார்பிலிருந்து கொரியக் கடலோரப் பாதுகாப்புப் படையின்   BADARO எனும் கப்பல் பங்குபெற்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்