2021ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தின் 2கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன.
சிஇஓ உலகப் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், ஃபேஷன், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைக் கல்லூரிகள் எனப் பலவற்றின் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாண்டு இதில் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி 49வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 64வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதேபோல புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இதில் 59வது இடத்தைப் பிடித்து உள்ளது.
வாரணாசி மருத்துவக் கல்லூரி இதில் 72வது இடத்தில் உள்ளது.