அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR - Council of Scientific and Industrial Research) கீழ் இயங்கும் தேசிய வான்வெளி ஆய்வகமானது ஒரு சுய பாதுகாப்பு கொண்ட மேலங்கியை உருவாக்கியுள்ளது.
இந்த அங்கியானது பாலிபுரெப்பிலீன் கொண்டு நூற்கப்பட்ட பல அடுக்கு உடைய ஒரு நெய்யப்படாத துணியைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த அங்கியின் முக்கியமான பயன் என்னவெனில் இறக்குமதி செய்யப்பட்ட மற்ற அங்கிகளுடன் ஒப்பிடப்படும் பொழுது இது விலை குறைந்ததாக உள்ளது.