TNPSC Thervupettagam

சிக்கன் குனியாவின் சிகிச்சைக்கான மூலக்கூறு

April 30 , 2018 2400 days 885 0
  • ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Technology -IIT) ஆராய்ச்சியாளர்கள் Pep I மற்றும் Pep II எனும் இரு சிறிய சக்தி வாய்ந்த மூலக்கூறுகளை கண்டறிந்துள்ளனர்.
  • இந்த இரு மூலக்கூறுகளானது மிகப்பெரிய அளவிலான  தடுப்பு செயல்பாடுகளினை  (Inhibitory activity)  கொண்டதன் காரணமாக   சிக்கன்குனியா நோயின் சிகிச்சையில்  இவை  பெரிதும் பயன்படும்.
  • இந்த மூலக்கூறுகள் மிகவும் அதிகளவிலான வைரஸ் எதிர்ப்பு செயல்பாடுகளினைக் (antiviral activity) கொண்டது. இவற்றினுடைய சிறிய அளவிலான வைரஸ் எதிர்ப்பு  செயல்பாடானது சிக்கன்குனியா வைரஸின் செயல்பாடுகளை 99 சதவீதம் குறைக்கவல்லது.

  • Pep I மூலக்கூறுகளானது வைரஸ்களை கொல்லுதலில் மிகுந்த திறனுடையது. 5 மைக்ரோ மோலார் (micro Molar) அளவில் வைரஸ்களில் இவை 99% குறைவை ஏற்படுத்தும்.
  • இவை மிகுந்த செயல்திறனுடன் வைரஸ்களின் புரதத்தினுடன் பிணைந்து வைரஸ்களின் பெருக்கத்தை தடுக்கும்.
  • சிக்கன் குனியா ஆனது கொசுக்களினால் பரவக் கூடிய வைரஸாகும். இந்த வைரஸானது ஏடிஸ்எஜிப்தி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ்  (Aedes albopictus) கொசுக்களினால் பரப்பப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்