சிக்கிம் மாநிலமானது மே 16 அன்று அதன் 44-வது மாநில தினத்தை கொண்டாடியது.
1950 ஆம் ஆண்டின் உடன்படிக்கையின் படி தகவல் தொடர்பு, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சிக்கிமின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை இந்தியா கவனித்து வந்தது.
1975 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக சிக்கிம் மக்கள் வாக்களித்தனர்.
1975 ஆம் ஆண்டு மே 16 அன்று அதிகாரப் பூர்வமாக இந்தியாவின் 22வது மாநிலமாக சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது.
தொடக்கத்தில் வேறு எந்த மாநிலத்திற்கும் வழங்கப்படாத ஒரு சிறப்பு நிலையான “கூட்டு மாநிலமாக” அதனை அமைப்பதற்கான விதிமுறைகளை 35வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் வழங்கியது.
ஒரு மாதத்திற்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட 36வது அரசியலமைப்பு சட்டத் திருத்தமானது 35வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மாற்றி சிக்கிமை ஒரு முழுமையான மாநிலமாக மாற்றியது.
2019 ஏப்ரல் 29, அன்று, சிக்கிமின் முதல்வரான பவன் குமார் சாம்லிங், நீண்ட காலம் (23 ஆண்டுகள் 4 மாதங்கள் மற்றும் 17 நாட்கள்) பதவி வகித்த முதலமைச்சர் எனும் புதிய சாதனையைப் படைத்தார்.
கடந்த வருடம், உலகின் முதல் 100 சதவிகித கரிம மாநிலமாக மாறியதற்காக "சிறந்த கொள்கைகளுக்கான ஆஸ்கார்" என அறியப்படும் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான “எதிர்கால கொள்கை விருது” சிக்கிமிற்கு வழங்கப்பட்டது.