டேராடூனில் உள்ள வாடியா இமாலயப் புவியியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டு, சிக்கிமில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
2000 ஆம் ஆண்டு முதல், மேற்கு மற்றும் மத்திய இமாலயப் பனிப்பாறைகள் குறைவான உருகுதலைக் கொண்டுள்ளதாக காட்டின.
ஆனால் சிக்கிம் பனிப் பாறைகளைப் பொறுத்த வரையில், உருகும் விகிதமானது அதிகரித்துள்ளது.
கோடைக் கால வெப்பநிலை அதிகரிப்பானது பனிப் பாறைகள் உருகுதலுக்கு முக்கியக் காரணமாகும்.
பனிப்பாறைகளின் நீளம், கழிவுகள் உள்ள பகுதிகள், பரப்பு, பனிப்பாறை ஏரிகள், பனி உயரம் ஆகிய பல்வேறு கூறுகளைப் பற்றி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஆய்வு இதுவாகும்.