TNPSC Thervupettagam

சிக்கிம் மாநில நிறுவன தினம் – மே 16

May 18 , 2021 1199 days 373 0
  • சிக்கிம் ஆனது 1975 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று இந்திய ஒன்றியத்துடன்  இணைந்தது.
  • அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆம் தேதியன்று சிக்கிம் மாநில நிறுவன தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 1950 ஆம் ஆண்டில் இந்தோ சிக்கிமிய ஒப்பந்தமானது கையெழுத்தானது.
  • இதன் மூலம் சிக்கிமானது இந்தியாவின் பாதுகாப்பு பெற்ற ஒரு மாநிலமாக மாறியது.
  • 1975 ஆம் ஆண்டு வரை சிக்கிமை நம்க்யால் வம்சமானது ஆட்சி செய்தது.
  • இந்தியப் பாராளுமன்றமானது 35வது திருத்தச் சட்டத்தில் சில நிபந்தனைகளை விதிக்கச் செய்து அதனை ஒரு “இணை மாநிலமாக” (Associate State) அறிவித்தது.
  • இந்த நிலையைப் பெற்ற ஒரே மாநிலம் சிக்கிமாகும்.
  • 36வது திருத்தச் சட்டமானது 35வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்து சிக்கிமை ஒரு முழு அளவிலான மாநிலமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்