தனது மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் சிக்சா சேது எனும் மொபைல் செயலியை ஹரியானா அரசு தொடங்கியுள்ளது.
இந்த செயலியானது கல்வி துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளின் நிர்வாகம் ஆகியவற்றில் உதவுகிறது.
இந்த கைபேசி செயலியானது ஹரியானா அரசு கல்லூரிகளில் உள்ள வருகைப்பதிவு, கட்டணங்கள், ஆன்லைன் சேர்க்கை மற்றும் உதவித்தொகை போன்ற அனைத்துத் தகவல்களையும் கொண்டிருக்கும்.