TNPSC Thervupettagam

சிக்மோ திருவிழா

April 1 , 2021 1243 days 710 0
  • இந்த ஆண்டு வசந்தகால திருவிழாவின் அணிவகுப்புகள் நடைபெறாது என கோவா அரசு அறிவித்துள்ளது.
  • இதற்கான முக்கியக் காரணம் திடீரென கோவிட் – 19 தொற்றுப் பாதிப்புகள் உயர்ந்துள்ளதே ஆகும்.
  • சிக்மோ கோவா மாநிலத்தில் நடைபெறும் மிகப்பெரிய வசந்தகால திருவிழாவாகும்.
  • இது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற இருந்தது.
  • சிக்மோ திருவிழா என்பது கோவாவில் பழங்குடியினர் சமுதாயத்தால் கொண்டாடப் படுகிற ஒரு வளமான மற்றும் பொன் நெல் அறுவடையினைக் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும்.
  • வசந்த காலம் தொடங்குவதைக் குறிக்கும் இந்த திருவிழாவானது குன்பீஸ், கௌடாஸ் மற்றும் வெளிப்ஸ் போன்ற விவசாய சமுதாயத்தினரால் கொண்டாடப்படுகிறது.
  • கோடேமோதினி, கோபா மற்றும் புகாதி போன்றவை இவ்விழாவில் பங்கேற்பவர்கள் மேற்கொள்ளும் நாட்டுப்புற நடனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்