சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம்
November 3 , 2020
1488 days
1026
- இந்திய வனவிலங்கு மையமானது குஜராத் வனத் துறையுடன் இணைந்து சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டப் பரிந்துரையை உருவாக்கியுள்ளது.
- இந்த பரிந்துரையின் கீழ் எதிர்காலத்தில் சாத்தியமான சிங்கங்கள் இடமாற்றத்திற்காக பின்வரும் 6 புதிய தளங்களை அடையாளம் கண்டுள்ளது.
- மாதவ் தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேசம்
- சீதாமாதா வனவிலங்குச் சரணாலயம், இராஜஸ்தான்
- முகுந்த்ரா மலைகள் புலிகள் காப்பகம், இராஜஸ்தான்
- காந்தி சாகர் வனவிலங்குச் சரணாலயம், மத்தியப் பிரதேசம்
- கும்பல்கர் வனவிலங்குச் சரணாலயம், ராஜஸ்தான்
- ஜெசோர் – பாலராம் அம்பாஜி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் அதை ஒட்டியுள்ள நிலப் பகுதி, குஜராத்
- சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டமானது ஆசியச் சிங்கங்களின் பாதுகாப்பிற்காக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது.
- இதன் கடைசி எஞ்சிய இனமானது குஜராத்தின் ஆசியச் சிங்க நிலப்பகுதியில் உள்ளது.
Post Views:
1026