சிங்கப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் டால்பின் (ஓங்கில்) பாதுகாப்புத் திட்டம்
August 20 , 2020 1562 days 659 0
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியப் பிரதமர் புலிகள் பாதுகாப்புத் திட்டம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக மத்திய அரசானது நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்கப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் டால்பின் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்கள் இந்தியாவில் இந்த 2 அருகி வரும் இனங்களின் உயிரிப் பன்முகத் தன்மையின் பாதுகாப்பிற்காக மத்திய அரசினால் தொடங்கப்படவுள்ளன.
சிங்கப் பாதுகாப்புத் திட்டம் ஆசியச் சிங்கங்களின் பாதுகாப்புடன் தொடர்பு கொண்டதாகும்.
இது நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் வாழிட மேம்பாட்டின் மீது கவனம் செலுத்த உள்ளது.
கங்கை ஆற்று ஓங்கிலானது சுட்டிக் காட்டும் இனங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது அந்தச் சூழலமைப்பின் ஒட்டு மொத்த நிலை குறித்த தகவலை அளிக்கின்றது.
கங்கை ஆற்று ஓங்கில் ஆனது ஐயுசிஎன் அமைப்பின் செந்தரவுப் பட்டியலின் படி ஒரு அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது CITES-ல் பட்டியல் – 1ல் (The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) வைக்கப் பட்டுள்ளது.